2009 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுபெற்ற கவிஞர் புவியரசு அவர்களின் கையொப்பம் கவிதை நூலின் 4ஆம் பதிப்பினை 22.09.2023 வெள்ளிக்கிழமை அன்று பார்க் கல்வி நிறுவனங்களின் பொன்விழாவில் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்கள் வெளியிட, கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு.இரவி அவர்களும் கவிஞர் ஐயா அவர்களின் புதல்வி புவி.பாக்யலட்சுமி அவர்களும் பெற்றுக் கொண்டனர். உடன் தலைமை செயல் அதிகாரி அனுஷா அவர்களும் சந்திரயான் விஞ்ஞானி திரு.மயிர்சாமி அண்ணாதுரை அவர்களும்
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் இவ்வுரை நூலுக்கு அளித்த அணிந்துரை முருகப்பெருமான் திருவருள் முழுவதும் பெற்ற நம் அருணகிரி நாதர் அருளிச்செய்த கந்தரநுபூதியை அறியாதார் அறியாதாரே. பாராயண நூல்களுள் முடிமணியாக விளங்குவது இது. வடிவில் சிறியதும் கருத்தில் பெரியதுமாக விளங்குவது. " கந்த ரநுபூதி பெற்று கந்த ரநுபூதி சொன்ன எந்த யருள்நாடி இருக்கும்நாள் எந்நாளோ " .... என்று தாயுமானப் பெருந்தகையார் உள்ளம் உருகி உணர்ச்சி ததும்பப் பாராட்டுவதனாலே இதன் கருதற்கரிய பெருமை தனிச் சிறப்புறுகின்றது. சைவ பானுவும் சித்தாந்தச் செல்வருமாகிய மா. வே. நெல்லையப்ப பிள்ளை அவர்களின் அறிய பெரிய ஆராய்ச்சியால் எழுதிய உரை சாலச் சிறந்தது என்பது இதனை நுணுகிப் படிப்போர் உணர்வர். இதனை தமிழ் உலகம் படித்து இன்புறுவதாக. அன்பன் கிருபானந்த வாரி. https://www.kavinpublications.in/book/kandaranuputhi/?_gl=1*pfj62d*_ga*MTg4MjEzMTAyMS4xNzE0NDQ4NzIx*_ga_R0XG01D0MG*MTcxNDQ0ODcyMC4xLjAuMTcxNDQ0ODcyMC4wLjAuMA..
Comments
Post a Comment